2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள் நன்றாக இருக்கும். ஏனென்றால் நிறைய செலவினங்கள் இருக்கிறது. வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்தாலும்கூட கையில் மிச்சம் இருக்க வாய்ப்பில்லை. புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் தேவையில்லாத விரயம் உண்டு. இந்த வாரம் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று சிந்தித்து செயல்படுங்கள். தேவையில்லாத வருத்தங்கள், கவலைகள் வேண்டாம். கிரக நிலைகள் மாறியிருப்பதால் உங்களது இளைய சகோதர - சகோதரிகளுக்கு செலவு செய்யுங்கள். பிரச்சினைகள் அனைத்தில் இருந்தும் மீண்டு வந்துவிடுவீர்கள். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. தேவையில்லாத எந்த விஷயத்திலும் தலையிடாதீர்கள். உங்கள் தொழிலில் யாரையும் நம்பாதீர்கள். யாரிடமும் பணம் கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். சொந்த தொழிலும் சுமார்தான். இந்த வாரம் முருகன் வழிபாடு மற்றும் பெருமாள் தரிசனம் நன்மை பயக்கும்.

Updated On 25 April 2024 5:47 AM GMT
ராணி

ராணி

Next Story