இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கொரோனா காலகட்டங்களில் யூ-டியூப்பை பார்த்து வீட்டில் முயற்சி செய்து பார்த்த இனிப்புகள், சூப்கள், கேக்கள் ஏராளம். அதில் ட்ரெண்டிங்கான ஒன்றுதான் புட்டிங். புட்டிங்கில் காபி புட்டிங், சாக்லேட் புட்டிங், தேங்காய் புட்டிங், இளநீர் புட்டிங் என்று பல வகைகள் இருக்கின்றன. இந்த பல வகையான புட்டிங்கில் ஒன்றான காபி புட்டிங் எளிதாக செய்வது எப்படி என்ற செய்முறையை இங்கு பார்க்கலாம்.


செய்முறை:

  • புட்டிங் செய்ய முதற்கட்டமாக பாலை நன்றாக சூடுசெய்ய வேண்டும். சீனா கிராஸ் உருகுவதற்கு சற்று நேரம் எடுக்கும். எனவே 50 கிராம் சீனா கிராஸ்க்கு 150 மி.லி தண்ணீர் ஊற்றி முன்னதாகவே ஊறவைக்க வேண்டும்.
  • அடுத்ததாக ஒரு தம்ளரில் தேவையான காபி பவுடர் சேர்த்து அதில் சிறிது பால் ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். பால் காய்ந்து கொதிவரும்போது 150 கிராம் சர்க்கரை சேர்த்து கலக்கவேண்டும். அதில் கரைத்து வைத்திருக்கும் காபி பவுடரை ஊற்றி கலக்க வேண்டும். கோகோ சுவை பிடித்தவர்கள் பால் சூடாகும்போதே கோகோ பவுடரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்தபின், அடுப்பை அணைத்துவிட்டு வெனிலா அல்லது பிடித்த எசன்ஸை காபியில் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். சர்க்கரை வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை அதிகமாக இருந்தால் சிறிது பால் ஊற்றிக்கொள்ளலாம். பால் அளவை அதிகரிக்கும்போது அதற்கேற்ப சீனா கிராஸின் அளவையும் அதிகரித்துக் கொள்ளவேண்டும்.
  • கலக்கப்பட்ட ஓரமாக வைத்து ஆற விட வேண்டும். இது ஆறும் வேளையில் ஊற வைத்த சீனா கிராஸை 5 நிமிடத்துக்கு அடுப்பில் வைத்து அது கரையும் வரை கொதிக்கவிட வேண்டும். சீனா கிராஸ் கரைந்த நிலையில் அதை அந்த காபி கலவையில் வடிகட்டி ஊற்ற வேண்டும்.
  • காபி சற்று ஆறியவுடன், மீண்டும் வடிகட்டி 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஆறவிட வேண்டும். கடைசியாக அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன்மேல் சாக்கோ சிப்ஸ் அல்லது நட்ஸ் தூவி, 2 மணி நேரத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால் சில்லான காபி புட்டிங் ரெடி.
Updated On 2 Oct 2023 6:38 PM GMT
ராணி

ராணி

Next Story