இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று சுய்யம். இதனை பெரும்பாலும் மைதா மாவை பயன்படுத்தித்தான் செய்வார்கள். உள்ளே வைக்கும் ஸ்டஃப்பும் தேங்காய் பூரணம் அல்லது பருப்பு பூரணமாகத்தான் இருக்கும். ஆனால் மைதா உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்குமே தெரியும். அனைவருக்கும் பிடித்தமான அதேசமயம் ஆரோக்கியமான சுய்யத்தை மைதா இல்லாமல் எப்படி செய்வது என பார்க்கலாம்.


செய்முறை:

  • நவதானியத்தை கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஊறவைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் பாதி அளவுக்கு தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
  • நவதானியம் மற்றும் தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு மிக்ஸ் செய்யவேண்டும்.
  • பூரணமானது நெகிழ்வாகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக் கூடாது. இதனை சிறு சிறு பந்துகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது ஸ்டஃபிங் ரெடி.
  • மேல் மாவிற்கு இரண்டு மணிநேரம் ஊறவைத்த கருப்பு உளுந்தை சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். இது பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்திருக்கும் பூரணத்தை கருப்பு உளுந்து மாவில் தோய்த்து போடவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எடுத்தால் சுட சுட சுவையான கருப்பு உளுந்து சுய்யம் ரெடி.

கருப்பு உளுந்தின் நன்மைகள்:

  • கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ரத்தசோகை நீங்கும்.
  • மேலும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களுக்கு ஊட்டமளிக்கும்.
  • இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.
Updated On 5 Feb 2024 6:54 PM GMT
ராணி

ராணி

Next Story