அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு நாளை ஜென்னிஸ் கிளப் கூட்ட அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

தேசிய பொதுச்செயலாளர் நேரு நகர் நந்து, தலைமையில் தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார், அனைவரையும் வரவேற்று பேச உள்ளார் . தேசிய தலைவர் ஹென்றி விழா சிறப்புரையாற்று உள்ளார். விழாவிற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளார். விழாவில் தேசிய நிர்வாக செயலாளர் ஜெயச்சந்திரன், தேசிய பொருளாளர் சந்திரசேகர்,தேசிய செயற்குழு தலைவர் வினோத் சிங் ரத்தோர், மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.

Updated On 12 Feb 2024 10:40 AM GMT
ராணி

ராணி

Next Story