13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.

நேற்று நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து,. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் நன்றாக விலாசுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சுப்மன் கில். 1 விக்கெட் வீழ்ந்தபோதிலும் பவர் பிலேவில் தனது ஆட்டத்தை நிலைநாட்ட தொடங்கினார் ரோஹித் சர்மா. 50 ரன்களுக்கு மேல் எடுப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.

அடுத்து களமிறங்கும் பிலேயர்கள் அசால்டாக அடித்து அதிக ரன்களை குவிப்பார்கள் என்று எண்ணிய நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்க, விராட் கோலி, கே. எல் ராகுல் பாட்னர்ஷிப் நிதானமாக ஆடி இந்திய அணிக்கு ரன்களை சேர்க்கத்தொடங்கியது. பாட்னர்ஷிப் வலுப்பெற்று 100 ரன்கள் இந்தியாவிற்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நன்றாக சென்றுகொண்டிருந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த விராட் கோலி பேட் கம்மிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்ததால் பாட்னர்ஷிப் சொதப்பலாகிவிட்டது. அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய அணியினர் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர். ஆட்டமுடிவில் முதன்முறையாக இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் ஆல் அவுட் ஆகி 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.


241 ரன்களை இலக்காய் கொண்டு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் களமிறங்க, முகமத் ஷமி பந்துவீச்சில் 7 ரன்களில் தனது விக்கெட்டை கொடுத்தார் டேவிட் வார்னர். பின் களமிறங்கிய மிச்சேல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. டிராவிஸ் ஹெட், லபுஷேன் பாட்னர்ஷிப் அதிக ரன்களை குவிக்க ஆரம்பிக்க இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அந்த பாட்னர்ஷிப்பை முறியடிக்க திணறினார்கள். நிதானமாக அந்த பாட்னர்ஷிப் நீடித்தநிலையில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். உடன் விளையாடிய லபுஷேன் அரைசதம் அடித்தார். ஒரு வழியாக 137 ரன்களில் முகமத் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டிராவிஸ் ஹெட். இருந்தபோதிலும் 43வது ஒவரிலேயே 241 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 6வது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி. முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தாலும், முயற்சியை தளரவிடாமல் பேட் சும்மிங்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இறுதி வரை சென்று உலக கோப்பை சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி 11 ஆட்டத்தில் 3 சதம், 6 அரை சதம் உள்பட 765 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.


இதுவரை 2 முறை உலக கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி, இம்முறை கோப்பையை இழந்திருந்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், மக்களும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து இந்திய அணிக்கு தங்களது ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்து கொண்டு தான் வருகிறார்கள். இது இந்திய அணி வீரர்களுக்கு சற்றே ஆறுதலை அளித்து வருகிறது.

Updated On
ராணி

ராணி

Next Story