புகழ் கூடும்
By : ராணி
Update:2024-02-13 00:00 IST
2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களது கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். அரசு துறைகளில் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். நம்பியவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஏற்றம், முன்னேற்றம் ஏற்படும். வீடு, இடம் மாற நினைப்பவர்கள் மாறலாம். நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். சொந்தமாக சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் காதல் வெற்றி அடைந்து திருமணத்தில் முடியும். துர்க்கை மற்றும் காளியின் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.