ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு! எங்கு தெரியுமா?

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு செப்.7ஆம் தேதி, சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள, அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெறும் என ஆட்சித்தமிழ் ஐ,ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது.;

Update:2025-09-05 17:10 IST
Click the Play button to listen to article

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள, அறிஞர் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார். 

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

சென்னையில் இயங்கிவரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தொடங்க இருக்கிறது.

ஒரு நாள் இலவச பயிற்சி

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, செப்டம்பர் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரடியாக நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு கலந்து கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும், ஆசிரியர் தகுதித் தேர்வு நுட்பங்களையும் தெளிவாக விளக்குகிறார். மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய பாடத் திட்டங்களை சுருக்கமாக கற்றுத்தர உள்ளனர்.



ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025’ எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

முன்பதிவு செய்க

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், ‘TNTET ONE DAY FREE COACHING-2025’ என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியுடன் 9176055514 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் பங்குபெற்று பயன்பெற விரும்புபவர்கள், இதுகுறித்த மேலும் விவரங்களை அறிய 9176055542, 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்