2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு நன்றாக இருக்கும். குறிப்பாக, பேச்சின் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் ஆசைகள் கைகூடும். வேலையில், நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் எதிர்பார்த்தவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் இருந்தால் விடுபடுவீர்கள். கடன் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உங்கள் முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். வேலை தொடர்பான பயணம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல செய்திகள் வரவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியவும் வாய்ப்புள்ளது. கலைத்துறையினருக்கு புகழ், அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவிதமான யூக வணிகங்களிலும் லாபம் உண்டாகும். இந்த வாரம் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாரையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.
