2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் நிலவிய மனக்குறை நீங்கி, மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சமூக செயல்பாடுகளில் ஆர்வம் கூடும். எதிர்பாராத ஆலய தரிசனங்களும், தெய்வ தரிசனங்களும் உண்டாகும். இந்த வாரம் உங்கள் தொழில், வேலை, வியாபாரம், திருமண வாழ்க்கை, வருமானம் எதுவாக இருந்தாலும் திருப்தியின்மை என்பது இருக்கும். நல்ல நட்பு வட்டம் அமையும். ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை கவனமாக வழிநடத்துங்கள். அவசரப்பட்டு தகராறு செய்வதைத் தவிர்க்கவும். 7-ம் இடத்தில் கேது இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். உடல் நலனில் அக்கறை செலுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம். எதிர்பாராத காதல் விஷயங்கள், குறிப்பாக ஜாதி, மதம், இனம், மொழி கடந்து புதிய உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் சிவ வழிபாடு மற்றும் பைரவர் தரிசனம் உங்களுக்கு மிகவும் முக்கியம்.
