2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இதுவரை தடைப்பட்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றி பெறும். உடல் உழைப்பு இல்லாமல் பெரிய அளவில் தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் தகராறுகள், நிச்சயமற்ற நிலை, லாபத் தடைகள் போன்றவை இருக்கும். முன்னோர்களின் சொத்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இல்லையெனில் கணவன் அல்லது மனைவி மூலம் தனவரவு ஏற்படும். பென்ஷன், பிஎஃப், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் போன்ற பணம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு அந்த பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உங்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, பெரிய அளவில் பிரகாசமாக இல்லாவிட்டாலும், முயற்சி செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வேலையை விட்டு வெளியேறும் சூழ்நிலைகள் அல்லது வெளியேற்றப்படும் சூழ்நிலைகள் வரலாம். உயர் கல்வியில் தடங்கல் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாழ்க்கையில் திருப்தியற்ற மனநிலை இருக்கும். அதேசமயம், எதிர்பாராத நட்பு ஏற்படும். குறிப்பாக, அந்நிய மொழி பேசும் நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் மகாலட்சுமி மற்றும் துர்க்கையை வணங்குவது நன்மையை தரும்.

Updated On 3 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story