2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வரவு வரலாம். எதிர்பாராத ஆலய தரிசனங்களும், பொழுதுபோக்கு மற்றும் பயணச் செலவுகளும் ஏற்படலாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்குப் பயன் தந்தாலும் உங்களுக்கு லாபம் குறைவாக இருக்கலாம். கடன் கொடுத்த பணம் திரும்புவது கடினம். பணம் மற்றும் பொருட்கள் களவு போக வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். பெரிய முயற்சிகள் வெற்றி பெறாது. வீடு, இடமாற்ற முயற்சிகளில் தடைகள் வரலாம். உயர் கல்வியில் சிறு தடைகள் ஏற்படும். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது. தொழிலில் பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது. தொழில் தகராறுகள் மற்றும் தடங்கல்கள் ஏற்படலாம். இருப்பினும், உங்கள் நட்பு வட்டம் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். பிரச்சனைகளிலிருந்து மீள வாய்ப்புள்ளது. தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் வேலை இழப்பு ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், முருகப் பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.
