2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் ஒரு புதிய வரவுக்கான வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். முயற்சிகளில் கடின உழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். பயணங்களில் தடை ஏற்பட்டாலும் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இளைய சகோதர சகோதரிகளுடன் கவனமாக இருங்கள். உறவுகளால் நன்மையும், பிரச்சனையும் ஏற்படலாம். அசையா சொத்துக்களை விற்க சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பங்குச்சந்தை, லாட்டரி போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு அதற்கான பேச்சுவார்த்தைகள் அல்லது வாய்ப்புகள் உண்டு. நண்பர்களால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளாலும் ஏற்றம் உண்டு. மணவாழ்க்கை சாதாரணமாக இருக்கும். சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். நிரந்தர சொத்துக்கள் வாங்க தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் பைரவரையும், காளியையும் வழிபடுவது முக்கியம்.

Updated On 17 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story