2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சனி இரண்டாம் இடத்தில் இருப்பதால், பேச்சு மற்றும் பேச்சின் மூலம் வருமானம் கிடைக்கும். ஆனால், பேசுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது பிரச்சனைகளை உருவாக்கலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குழந்தையின்மை சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு நல்ல செய்தி வரலாம். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வேலை இல்லாமல் இருக்க மாட்டீர்கள், ஆனால் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்டு நடப்பது நல்லது. பெரிய முயற்சிகளைத் தவிர்த்து, வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். சொந்தமாக நகை, இடம், வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் வாங்க வாய்ப்புகள் உண்டு. விவசாயத்தில் இருப்பவர்களுக்கு மகசூல் ஓரளவு இருக்கும். குரு மற்றும் சனியின் பார்வை லாபஸ்தானத்தில் இருப்பதால், மூத்த சகோதரர்-சகோதரியால் நன்மை, எதிர்பாராத நட்பு வட்டம், நண்பர்களால் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காளி மற்றும் மகாலட்சுமியை வழிபடவும்.
