2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் எதிர்பாராத தெய்வ தரிசனம், குறிப்பாக ஆலய தரிசனம் மற்றும் ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் புதிய வரவு வரும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு தெய்வ அருளால் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முயற்சிகள் இந்த வாரம் பெரிய அளவில் வெற்றியடையாது. வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, வேலை இருந்தாலும் எந்த வேலையிலும் ஒரு திருப்தியற்ற மனநிலை இருக்கும். பெரிய பதவியில் இருந்தாலும் சரி, வேலையில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும். அவசரப்பட்டு, பார்க்கும் வேலையை விட்டுவிட வேண்டாம். வேறு நல்ல வேலை கிடைப்பதில் தடைகள் உண்டு. வேலையை விட்டு நீக்கப்படுவதற்கான சூழ்நிலையும் இந்த வாரம் உண்டு. உங்கள் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் செய்தால் லாபம் இல்லை, உங்கள் உழைப்பு அடுத்தவர்களுக்கு லாபம் தரும், உங்களுக்கு பயன் இருக்காது. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விற்பனை இருக்கும். நீண்ட நாட்களாக வீடு, கார், அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். உங்கள் அந்தஸ்து, புகழ் கூடும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறும். சில முடிவுகளை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுங்கள். மகாலட்சுமி மற்றும் முருகப்பெருமானை வழிபடவும்.
