2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் சேவை ஸ்தானத்தில் சூரியன், புதன் இருப்பதால், நிச்சயம் ஒரு வேலை இருக்கும். வேலையில் பதவி உயர்வு, ஊக்கத்தொகை, போனஸ் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் வேலையில் நீங்கள் நம்பியவர்கள் இந்த வாரம் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தகராறுகள், நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், வியாபாரம் விட்டுவிட்டு நடக்கும், லாபம் சாதாரணமாகவே இருக்கும். ஜாதி, மதம், இனம், மொழி கடந்த தொடர்புகள் அல்லது காதல் உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே பிரேக்கப் ஆன உறவுகள் கூட இந்த வாரம் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தை குரு, சனி பார்ப்பதால், உங்களின் விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மூத்த சகோதர, சகோதரிகள் இருந்தால், அவர்களால் வாழ்க்கையில் ஏற்றம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். நீண்ட நாட்களாகக் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இறை அருளால் கிடைக்கும். உங்கள் குழந்தைகளால் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றம், ஏற்றம், புகழ், அந்தஸ்து கிடைக்கும் வாரமாக இது இருக்கும். பழைய பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய வாகனங்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு வியாபாரம் சாதாரணமாக இருக்கும், உற்பத்தி, விற்பனை, லாபம் அனைத்தும் உண்டு. தாயாரின் அன்பு, ஆதரவு கிடைக்கும். கல்வியை பொறுத்தவரை இளங்கலை மற்றும் உயர் கல்வி என இரண்டும் சிறப்பாக இருக்கும். பெருமாளையும் விநாயகரையும் வழிபடுவது மிகவும் முக்கியம்.

Updated On 15 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story