2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார ரீதியாக பார்க்கும்போது உங்கள் கையில் மற்றவர்கள் பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. பேச்சைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த வாரம் வருமானமும், ஆதாயமும் பெருகும். உங்கள் குடும்பத்தில் புதிய வரவுக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். மேலும் உங்களை மேம்படுத்தவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். நீங்கள் யாருடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்களோ, அவர்களிடமிருந்து உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் நீங்கள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால், அதற்கான பலனை அனுபவிப்பீர்கள். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் நல்ல விலைக்குப் போக வாய்ப்புள்ளது. பங்குச்சந்தையில் பெரிய முதலீடுகள் செய்ய விரும்புகிறவர்கள் அல்லது ஆன்லைன் வணிகம் தொடங்க எண்ணுபவர்களுக்கு இது சாதகமான வாரமாக இருக்கும். உடல் உழைப்பு இல்லாமல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருவருமே லாபம் அடைவார்கள். உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் முருகப் பெருமானையும், சிவபெருமானையும் வழிபடுவது மேலும் நன்மைகளைத் தரும்.

Updated On 13 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story