2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. நீங்கள் ஏதேனும் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம் அல்லது ஆலய தரிசனம் ஏற்படலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பிரபலமும், புகழும் கிடைக்கும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இந்த வாரம் பரவாயில்லை. கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் வேலையில் பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருக்க வேண்டிய வாரம் இது. புதிய காதல் மலர வாய்ப்பு உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம். 2-ம் திருமணம் செய்ய முயற்சிப்பவர்கள் இந்த வாரம் முயற்சி செய்யலாம். விசா, பாஸ்போர்ட் கிடைக்காமல் தாமதமானவர்களுக்கு இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மூத்த சகோதரி-சகோதரரால் வாழ்வில் நன்மை, மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நட்பால் உங்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். இந்த வாரம் நீங்கள் செய்யும் முயற்சிகள் சுமாராகவே இருக்கும். ஆனால் நீங்கள் நினைத்த காரியங்கள் நடப்பதற்கான தைரியமும் தன்னம்பிக்கையும் கிரகங்களால் இயற்கையாகவே அமையும். இந்த வாரம், அம்பாள் மற்றும் சிவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
