2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களை அறியாத மகிழ்ச்சியும், பொழுதுபோக்குகளும், பயணங்களும் அமைய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை, லாட்டரி, வணிகம் போன்ற யூக வணிகங்களில் சாதாரண முதலீடுகளைச் செய்யலாம், ஓரளவு லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றி பெறும். உற்பத்தித் துறையினருக்கு விற்பனை நன்றாக இருந்தாலும் லாபம் குறைவு. விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் மற்றும் மகசூல் உண்டு. தொழில் நன்றாக இருக்கும். லாபம் கிடைத்து வருமானம் கூடும். கூட்டு தொழில் செய்பவர்களும் லாபம் அடைவார்கள். திருமண வாழ்க்கையில் மிகுந்த கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் பிரிவு, பிரச்சனை, போராட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்விக்கு ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும் மறுபக்கம் தடைகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள், பழைய நண்பர்களாலும் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் உண்டு. மூத்த சகோதர சகோதரிகளாலும் நன்மை உண்டு. சிவ வழிபாடும், நரசிம்மர் தரிசனமும் உங்களுக்கு மிகவும் முக்கியம்.

Updated On 22 July 2025 12:04 AM IST
ராணி

ராணி

Next Story