2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வேலைவாய்ப்பில் ஓரளவு சாதகமான நிலை இருக்கும். நீண்ட நாட்களாகக் கிடைக்காத மூதாதையர் சொத்து அல்லது நிலுவையில் இருந்த பணம் இந்த வாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு. கடன் விண்ணப்பித்தவர்களுக்குக் கடன் கிடைக்கும், அதுவும் நல்ல காரணங்களுக்காகவே அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதல் உறவில் சிறு போராட்டங்கள் அல்லது பிரிவு ஏற்படலாம். பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ் போன்ற துறைகளில் குறைந்த முதலீட்டில் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. கலைத்துறையினருக்கு அந்தஸ்தும் புகழும் கூடும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து, தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். கூட்டாளி தொழில் செய்பவர்களுக்கு, கூட்டாளியால் சவால்கள் ஏற்படலாம். திருமண வாழ்க்கை ஓரளவுக்கு இருக்கும். நல்ல நட்பு வட்டம் உருவாகும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர், சகோதரியால் ஏற்றம் உண்டு. இந்த வாரம் எதிலும் ஒரு திருப்தியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது, அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வேலை, தொழில், வாழ்க்கை அனைத்திலும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வது அவசியம். விவசாயத்தில் மகசூல் மற்றும் லாபம் உண்டு. முருகப்பெருமானையும் பெருமாளையும் வழிபடுவது நன்மை பயக்கும்.
