2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சனி 2-ம் இடத்தில் இருப்பதால், காதல் விஷயங்கள் கை கூடுவதில் தடைகள் இருக்கும். ஆனால், ராசிக்கு 5-ம் இடத்தில் குரு தன் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால், மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு, பயணம் போன்ற நல்ல பலன்கள் உண்டு. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. சனி வக்ர கதியில் இருப்பதால், பேச்சில் கவனமாக இருங்கள். அதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது. ஆனால், ஆறாம் இடத்தில் சூரியன், புதன் இருப்பதால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். இந்த வாரம் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். லாப ஸ்தானத்தை குருவும், சனியும் பார்ப்பதால் லாபம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். நீண்ட தூர பயணங்களில் சிறிய தடைகள் இருக்கலாம். தந்தையின் ஆதரவு கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் பெரியளவில் உண்டு. மகாலட்சுமியையும், சிவனையும் வழிபடுவது நல்லது.
