2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் சேவை ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இருப்பதால், வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். விவசாயம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு மகசூல் மற்றும் லாபம் கிடைக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்குத் தகுந்த விற்பனை இருக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் அல்லது நிலுவை தொகை எதிர்பார்த்தால், அவை கிடைக்கும். நல்ல வேலையாட்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அவர்கள் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக செல்லப்பிராணிகள் வளர்க்க நினைத்தவர்களுக்கு, இந்த வாரம் அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், அது கிடைக்கும். எந்த காரணத்திற்காக கடன் வாங்குவீர்களோ, அது நிறைவேறும். உங்கள் ஆறாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ பிரிவு அல்லது தேவையற்ற செலவுகள், நஷ்டங்கள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். நல்ல நட்பு உருவாகும். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். கையில் பணம் மற்றும் பொருட்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போயிருந்தால், அவை நடப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். இறைவனின் அருள் உங்களுக்குத் துணை நிற்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத தெய்வ தரிசனம் மற்றும் ஆலய தரிசனமும் ஏற்படலாம். இந்த வாரம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சகோதர-சகோதரிகள் மற்றும் உறவுகளால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சனைகள் ஏற்படலாம். போக்குவரத்து மற்றும் வாகனங்களில் எச்சரிக்கையாக இருங்கள். இந்த வாரம் முருகர் மற்றும் பைரவரை வழிபடுவது நல்லது.
