2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் சொந்தத் தொழில் சாதாரணமாக இருக்கும். கூட்டாளி தொழில் செய்தால், அவர்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டிய வாரமாக இருக்கும். பணவரவு பரவாயில்லை. உங்கள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருந்தும் பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. கல்வி இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விற்பனை மற்றும் லாபம் கிடைக்கும். தாயின் அன்பு ஆதரவு கிடைக்கும். ஆனால், எட்டாம் இடத்தில் சூரியன், செவ்வாய் இருப்பதால் சகோதரர்கள் மற்றும் தந்தை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களால் மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். வேலையில் பல நெருக்கடிகள் இருக்கும். உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போகலாம். இந்த வாரம் நீங்கள் முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

Updated On 16 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story