2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

ஏழரை சனி நடைபெறுவதால் தொழில் மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட, சனிக்கிழமையன்று திருநல்லாறு சென்று பரிகாரம் செய்யலாம். செல்ல இயலாதவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிற சனி, விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்ய சிறு சிறு முயற்சிகள் கைகூடி வரும். 26ஆம் தேதி பொருள் விரயம், தேவையற்ற செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. 27, 28 தேதிகளில் ஆரம்பத்தில் சற்று தாமதம், தடை ஏற்பட்டாலும் பிறகு சுமுகமாக இருக்கும். புது முயற்சிகள் வேண்டாம். பிறரிடம் பேசும்போது கவனம் தேவை. 1, 2 தேதிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

Updated On 26 Sept 2023 10:47 AM IST
ராணி

ராணி

Next Story