2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானங்கள், சம்பாத்தியங்கள் உண்டு. குழப்பமாக இருந்த விஷயங்களுக்கு தீர்வு வரும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த வாரத்தில் தொடங்கலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் வெற்றி பெற்று அது திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் நினைப்பதை செயலாக்கம் செய்யுங்கள். உங்கள் உறவினர்கள், இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களாலும் நற்பலன்கள் ஏற்படும். வேலையில் கவனம் செலுத்துங்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். குறிப்பாக உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருங்கள். பழைய கடனை அடைக்க, புது கடனை வாங்காதீர்கள். இருப்பதை வைத்து சமாளியுங்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், பாப்புலாரிட்டி கிடைக்கும். கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். இந்த வாரம் முழுவதும் சிவபெருமான், துர்கை அல்லது காளியை வழிபடுவது நல்லது.
