2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இடம், வீடு வாங்க வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. கல்வி சிறப்பாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு உண்டு. டாக்குமெண்டில் பிரச்சினை இருந்தவர்களுக்கு அது சரியாக வாய்ப்புள்ளது. கையில் பணம், தனம் வரும். இருந்தாலும் நீங்கள் நினைப்பதை கடன் பெற்றுத்தான் வாங்குவீர்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களை விட்டு பிரிந்து இருப்பீர்கள். அவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடைவது போன்று தோற்றம் உள்ளதால் கண்டிப்பாக முயற்சி எடுங்கள். எண்ணங்கள் ஈடேறும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் உதவி செய்வார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்கள் மீது திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். கணவன் - மனைவி உறவும் சுமாராக இருக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். புதிய காதல் மலர வாய்ப்பு உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதுமே விநாயகரை வழிபாடு செய்யுங்கள். துர்க்கை மற்றும் காளியை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 21 May 2024 7:45 AM GMT
ராணி

ராணி

Next Story