2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் முயற்சிகள் ஆரம்பத்தில் தடைகளை சந்தித்தாலும், பிறகு வெற்றி பெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையை பொறுத்தவரை ஏதாவது ஒரு வேலை இருக்கும். அதில் முன்னேற்றங்கள் இருக்கும். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரத்தில் யூக வணிகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் உங்களுடைய பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். சொந்த தொழில் செய்தாலும் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். வேலை, வருமானம், சொந்த பிசினஸ் அனைத்தும் சுமாராக இருக்கும் என்பதால் பொறுமையாக இருங்கள். உயர்கல்வி பரவாயில்லை. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் வெற்றி அடைவது போன்று இருந்தாலும், நிறைய போராட்டங்களும் இருக்கும். நெருங்கிய நண்பர்களை பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனம் மற்றும் விநாயகர் வழிபாடு பிரதானமாக செய்யுங்கள்.

Updated On 23 July 2024 4:08 AM GMT
ராணி

ராணி

Next Story