2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் ஒரு திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். வேலையை பொறுத்தவரை கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. அதனால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். சொந்த தொழில் சுமார். எந்த தொழிலாக இருந்தாலும் பெரிய அளவில் லாபம் இருக்காது. குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், அதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை இருக்கிறது. முறிந்த காதல் மீண்டும் சேர வாய்ப்புகள் உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. முயற்சிகளை கைவிடாமல் திரும்ப திரும்ப செய்யுங்கள். சோம்பேறித்தனத்தை கைவிட்டு சுறுசுறுப்பாக இருங்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பெரிதாக முன்னேற்றம் ஒன்றும் இல்லை. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.