2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். பேச்சின் மூலமாக வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு நன்றாக உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் சாதகமாக வந்து சேரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஏற்றம் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். புதிய முயற்சிகளை நோக்கி நகரலாம். நீண்ட காலமாக விற்பனையாகாமல் இருக்கும் இடம் நல்ல விலைக்கு போகும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். புதிய காதல் மலரும். எதிர்பாராத பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகா விஷ்ணு மற்றும் துர்க்கை வழிபாடு சிறப்பானதாக இருக்கும்.

Updated On 23 Jan 2024 2:13 AM GMT
ராணி

ராணி

Next Story