2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார ரீதியான பிரச்சினை இல்லை. முயற்சிகள் வெற்றி அடைவதில் தடைகள் ஏற்படும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள், வேறு வேலை மாற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யலாம். அப்பாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்காவது தர்மம் பண்ணுங்க. கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு விரயம் ஏற்படும். தொழில் சுமாராக உள்ளது. பி.ஆர். கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் போன்றவற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல சேல்ஸ் இருக்கு. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி போன்ற எதிலும் முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எந்த ஆசையும் வேண்டாம். வீடு, இடம், ஊர் மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. பைரவர் மற்றும் சக்கரத்தாழ்வார் தரிசனம் வெற்றியைத் தரும்.

Updated On 5 Feb 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story