2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உருவாகும். திருமண பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகள், பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, திருமணம் நடைபெறும். பேச்சின் மூலமாக வருமானம், சம்பாத்தியங்கள் இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உள்ளன. நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் திருப்தி இருக்காது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விலை கிடைக்கும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். உயர்கல்வியை தொடரலாம். அப்பாவால் நன்மை ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சி, குறிப்பாக ஆண் நண்பர்களால் நற்பலன்கள் ஏற்படும். உங்கள் ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. தொண்டர்களால் மகிழ்ச்சி, சந்தோசம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் அரசின் அங்கீகாரங்கள் ஆகியவை கிடைக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. முருகன் மற்றும் விநாயகர் வழிபாடு சிறப்பைத்தரும்.

Updated On 25 March 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story