2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய கவுரவம், அந்தஸ்து, புகழ் கூடும். அரசாங்கத்தால் நடைபெற வேண்டிய காரியங்கள் கைகூடும். பொருளாதாரம் மேம்படும். தேவையற்ற முயற்சிகள், பிரயாணங்கள் வேண்டாம். உறவுகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். ஷேர் மார்க்கெட் அல்லது ஆன்லைனில் முதலீடு செய்தால் ஓரளவு வருமானம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். சொந்த தொழில் செழிக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு அதுசார்ந்த பேச்சுவார்த்தைகள் நடக்கும். காதல் முறிவு ஏற்பட்டிருந்தால் மறுபடியும் இணையும் சூழல் அமையும். ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமாக சூழல் இருக்கும். நட்புகளிடம் சரியாக இல்லாவிட்டால் பிரிந்துபோவார்கள். தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம்.

Updated On 13 Nov 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story