2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கவுரவம், அந்தஸ்து, புகழ், செல்வாக்கு என அனைத்தும் காப்பாற்றப்படும். அரசாங்கத்தால் நடைபெறவேண்டிய காரியங்கள் நடக்கும். பேச்சின்மூலம் வருமானம் கிடைக்கும். எப்போதும் பணம் கையில் இருக்கும். முயற்சிகள் எதுவும் பெரியளவில் வெற்றியைத் தராது. இளைய சகோதர, சகோதரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்துகள் குறித்தோ, வீடு மாறுவதில் தாமதம் ஏற்படுவது குறித்தோ கவலைப்பட வேண்டாம். தேவையற்ற டென்ஷன் வேண்டாம். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கைகூடி வரும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவருமே அதிருப்தியுடன் இருப்பீர்கள். கடன் கொடுத்தால் திரும்ப வராது. தேவையற்ற பேச்சுகளை குறைப்பது நல்லது. துர்கை வழிபாடு மற்றும் சித்தர் ஜீவசமாதிக்கு சென்று வருவது நற்பலன்களை கொடுக்கும்.

Updated On 27 Nov 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story