2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நினைப்பது அனைத்தும் நடக்கும். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் மேம்படும். முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். நீங்கள் சம்பாதித்ததை முதலீடு செய்வது நல்லது. இல்லையென்றால் தேவையற்ற விரயங்களை, நஷ்டங்களை சந்திப்பீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை, விற்பனைக்கு தகுந்த லாபம் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய காதல் ஏற்படும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு மணவாழ்க்கை கைகூடும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ட்ரேடிங் போன்ற எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் உண்டாகும். தேவையில்லாத வைத்திய செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். விநாயகர் மற்றும் பெருமாள் வழிபாடு சிறப்பை தரும்.

Updated On 19 Feb 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story