2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது. நீங்கள் எடுத்து வைக்கும் விஷயங்களில் கவனம் தேவை. எந்த முயற்சியாக இருந்தாலும் 7-ஆம் தேதிக்கு பிறகு எடுப்பது நல்லது. எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்புள்ளது. இளைய சகோதரர்களுக்கு செலவு செய்வீர்கள். நெருங்கிய உறவுகளை பிரிந்து இருப்பீர்கள். சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல்கள் சிறப்பாக உள்ளது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் இருக்கு. புதிய காதல் மலரும். உங்கள் காதல் திருமணத்தில் முடியும். உயர்கல்வியை தொடரலாம். உங்கள் புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். தொழில்முனைவோராக விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யலாம். உங்கள் புதிய முயற்சிகள் வெற்றியடையும். முருகன் மற்றும் விநாயகர் வழிபாடு சிறந்தது.

Updated On 5 March 2024 11:08 AM GMT
ராணி

ராணி

Next Story