2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ராகு பகவான் 2-ஆம் இடத்தில் பேச்சு ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். முயற்சிகள் மட்டுமின்றி நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். உங்களது எண்ணங்கள் ஈடேறும். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. சாதாரணமாக முதலீடு செய்தாலும் லாபம் கிடைக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் காதல், திருமணத்தில் முடியும். திருமண வாழ்க்கை பரவாயில்லை. எதிர்பாராத பண வரவுகள் உள்ளன. அதிலும் கணவன் அல்லது மனைவி மூலமாக பணவரவு, பொருள் வரவு இருக்கும். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மைகள் உண்டு. உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் நினைத்ததை அடைவீர்கள். புதிய ப்ராஜெக்ட்டை இப்போதிலிருந்தே தொடங்குங்கள் நல்லதொரு முன்னேற்றம் அமையும். விநாயகர் மற்றும் காளி வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 19 March 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story