2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது நடக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் அந்த காதலும் வெற்றியடையும். கையில் பணம், தனம், பொருள் இருக்கும். துணிந்து செயல்படுவீர்கள். நீங்கள் நம்பியவர்கள் கட்டாயம் உதவி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை கூடும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பழைய சொத்துக்கள் விற்பனையாகி, புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உங்கள் கல்வி நன்றாக இருக்கிறது. ஷேர் மார்க்கெட், லாட்டரி டிக்கெட், டிரேடிங், போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். இந்த வாரம் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களது பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அப்பாவால் நன்மைகள் ஏற்படும். உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கிறது. வீட்டில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வாரம் முருகன் மற்றும் நரசிம்மர் வழிபட்டால் இன்னும் நன்மைகள் கிட்டும்.

Updated On 8 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story