2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குரு பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 4-ஆம் இடத்திற்கு வருவதால் கல்வி சிறப்பாக உள்ளது. அம்மாவுடன் புரிதல் இல்லாமல் இருந்தால் அந்த நிலைமைகள் மாறி இருவரும் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை, அதற்கு தகுந்த லாபம் இருக்கும். நீண்ட நாட்களாக சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்துவிடுங்கள். பெரிய அளவில் முயற்சி செய்யுங்கள். எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் நினைப்பது நடக்கும். அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கையில் பணம், தனம், பேங்க் பேலன்ஸ் இருந்தால் கூட செலவினங்கள் இருக்கும். சொந்தமாக சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன், சாலையோர கடைகள் போன்ற தொழில் செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். அதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவையும் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட தொழில்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் முனைவராக வர நினைப்பவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன. அரசாங்கத்தால் நன்மைகள் ஏற்படும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும்.

Updated On 30 April 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story