2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன. புதிதாக வீடு, மனை, வண்டி, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் நிறையவே உள்ளன. இருப்பினும் பேச்சை குறையுங்கள். தேவையில்லாத எந்த விஷயத்தையும் யாரிடமும் பேசாதீர்கள். மற்றவர்கள் பேசும்போது கவுண்டரும் கொடுக்காதீர்கள். இதுதான் இந்த வாரத்தில் நீங்கள் சக்ஸஸ் ஆவதற்கான முக்கியமான விஷயம். உங்கள் முயற்சிகளில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுங்கள். கண்டிப்பாக வெற்றியடைவீர்கள். என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ அதெல்லாம் நடக்கும். உங்களை நீங்களே முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. துணிந்து தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். வீடு, இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் காதல் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். மேலும் உங்களின் அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிஜிட்டல் கரன்சி, டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் யோசித்து செய்யுங்கள். சொந்த தொழில் சுமாராக உள்ளது. தேவையில்லாமல் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். இந்த வாரம் விநாயகர் மற்றும் முருகனை வழிபட்டால் ஏற்றம் கிடைக்கும்.

Updated On 6 May 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story