2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். நினைப்பது அனைத்தும் நடக்கும். தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகள் வேண்டாம். தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். புதிதாக காதல் மலரும். ஏற்கனவே காதல் இருந்தால் அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி அனைத்தும் பரவாயில்லை. இந்த வாரம் வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோசம் இருந்துகொண்டே இருக்கிறது. புதிய சொத்துக்களை வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். எந்த வேலை இருந்தாலும் அதில் ஒரு முன்னேற்றம், சம்பாத்தியம் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களை விட்டு பிரிந்து இருப்பீர்கள். அவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்ற எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது முன்னேற்றத்தை தரும்.

Updated On 14 May 2024 4:53 AM GMT
ராணி

ராணி

Next Story