2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார அளவில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. வீடு, இடம், புதிய ஆடைகள் போன்றவை வாங்க ஆசைபட்டவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. விவசாயமும் நன்றாக உள்ளது. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள், செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எதிர்பாராத பயணம், அதனால் சின்ன சின்ன பிரச்சினைகள், சகோதர - சகோதரிகளால் மன நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஆகியவை இருக்கின்றன. நெருங்கிய உறவுகளை பிரிந்து இருப்பீர்கள். அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ரேஸ், லாட்டரி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். லாபம் வருவது போன்ற தோற்றம் உண்டு. ஆனால், லாபம் இல்லை. சொந்த தொழில் செய்து வந்தால் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை போன்றவை இருக்கும். வேலையில் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். அதனால் செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். உயர்கல்வியை தொடர வாய்ப்புள்ளது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 27 May 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story