2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்தமாக இடம் வாங்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நகை, வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனங்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். எந்த துறையில் பணியாற்றினாலும், அதை திருப்தியான மனநிலையோடு செய்யுங்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக செலவு செய்வீர்கள். அவர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிகவும் கவனம் தேவை. ஏனென்றால், எதிரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். சொந்தத்தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். நெருங்கிய நண்பர்களை பிரிவீர்கள். புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் திருமணத்தில் முடியும். இந்த வாரம் மகாலட்சுமியை தரிசனம் செய்யுங்கள். சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை பிரதானமாக வழிபடுங்கள்.

Updated On 3 Jun 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story