2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஜென்ம சனி இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம். நிரந்தரமாக இடம் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள், அவரின் அன்பு, ஆதரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. உயர்கல்வி நன்றாக உள்ளது. உங்களின் குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். வருமானம் வர வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். டிஜிட்டல் கரன்சி வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். இந்த வாரம் லாபகரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், பிறகு நிறைய தடைகள் இருப்பதால் பெரிய அளவில் புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தில் சின்ன சின்ன தடைகள் இருக்கின்றன. அதனால் முடிந்தவரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர - சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவுகளால் நிறைய மனவருத்தங்கள், பிரச்சினைகள் போராட்டங்கள் உண்டு. சொந்த தொழில் சுமார். வேலையில், நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும் பெருமாள் மற்றும் துர்கையை வழிபாடு செய்து வாருங்கள்.

Updated On 10 Jun 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story