2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை திருப்திகரமாக செய்யுங்கள். மேலும், வேலையில் கவனமாகவும் இருங்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில், கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. லோன் வாங்கி இடம் வாங்குவதற்கான வாய்ப்போ, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்கான காலங்களோ இந்த வாரம் இயற்கையாகவே அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்பாராத பயணம், அதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் கரன்சி, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். கணிசமான லாபம் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. சொந்த தொழில் லாபகரமாக இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். உங்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை, காளி மற்றும் மகா கணபதியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Jun 2024 6:44 PM GMT
ராணி

ராணி

Next Story