2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நிரந்தரமாக ஒரு இடத்தை வாங்க முயற்சிப்பவர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இந்த வாரத்தில் ஏதோவொரு விதத்தில் வெற்றி கிடைக்கும். பேச்சை குறையுங்கள். தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள். கவுண்டர் ஏதும் கொடுக்காதீர்கள். இதுவே நீங்கள் வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். பெரிய அளவில் முயற்சிகள் ஏதும் வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் ஆகியவை உண்டு. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அவர்களால் நன்மைகள் உண்டு. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள். சொந்த தொழில் பரவாயில்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாகவும், சந்தோஷகரமாகவும் இருக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. முறிந்த காதல் மீண்டும் சேரும். வெளிநாட்டு தொடர்புகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் பிரதானமாக விநாயகரையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள் நற்பலன்கள் உண்டு.

Updated On 25 Jun 2024 3:45 AM GMT
ராணி

ராணி

Next Story