2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக உள்ளது. வீடு, இடம் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி அடகு வைக்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாகும். பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத டூர் அல்லது டிராவல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாரையும் நம்ப வேண்டாம். அதேநேரம் நம்பாமலும் இருக்க வேண்டாம். பெரிய அளவில் சிந்தித்து செயல்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் அமையும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். கிரக நிலைகள் சரியில்லாததால் ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். குழந்தைகளை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய காலம் இது. உங்களது தொழில் சுமார். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 July 2024 7:27 AM GMT
ராணி

ராணி

Next Story