✕
2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ஜென்ம சனி நிகழ்ந்து கொண்டிருப்பதால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வீடு வாங்குவதில் பொறுப்புடன் இருக்கவேண்டும். தொழில் மற்றும் பிறவற்றில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெரிய முயற்சிகள் வேண்டாம். யாரையும் நம்ப வேண்டாம். 17, 18 தேதிகளில் மேல் அதிகாரி மற்றும் உயர் மட்டத்தில் இருப்பவர்களிடம் கவனமுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். 19, 20 தேதிகளில் சாதகமான சூழல் அமையும். முயற்சிகள் வெற்றியடையும். 20, 21, 22 தேதிகளில் லாபம், பண வரவு, புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். 22 மதியத்துக்கு மேல் மற்றும் 23 தேதியில் கவனமுடன் செயல்படுதல் நல்லது.

ராணி
Next Story