2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் புதுமைகளைப் புகுத்துவீர்கள். வேலையில் புதிய விஷயங்களைக் கூட்டுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். வேகமாக புரிந்து கொண்டு விரைவில் கற்றுக் கொள்வீர்கள். மனதைரியம் நிறைய இருக்கும். தந்தை, தாய், கணவன் அல்லது மனைவியுடன் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும். சுக்கிரன் மாறும் போது வார இறுதியில் சண்டை அதிகமாகலாம். அமாவாசை, அஷ்டமி, நவமி நாட்கள் மற்றும் இராகு, எமகண்டம் காலத்தில் சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் 6 மற்றும் 7 ஆம் தேதி சற்று சிரமமாக இருக்கும். சந்திரன், சூரியன் மற்றும் சுக்கிரனுக்கு விளக்கேற்றினால் சண்டை, சச்சரவுகள் படிப்படியாகக் குறையும்.

Updated On 1 Aug 2023 11:00 AM GMT
ராணி

ராணி

Next Story