2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கான வாரமாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை இதுவரை இருந்த பிரச்சினைகள், போராட்டங்கள் நீங்கி பரவாயில்லாமல் இருக்கும். நேர்காணல்களில் கலந்து கொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத செலவுகள், விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனென்றால் முதலீட்டால் வருமானம் கிடைப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், அது பணமாகவோ, தனமாகவோ வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வி நன்றாக உள்ளது. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் பார்த்து முதலீடு செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 6 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story