2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மேஷ ராசியினருக்கு, இதுவரை தடையாக இருந்த காரியங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. நீண்ட நாட்களாக நீங்கள் திட்டமிட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். நீண்ட காலமாக வீடு மாற விரும்பியவர்களுக்கு இந்த வாரம் வீடு அல்லது இடமாற்றம் உண்டாகும். சொத்து விற்பனை ஆகாமல் தவிப்பவர்களுக்கு சொத்துக்களை விற்பதற்கான வாய்ப்பும், அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள், முன்பணம் பெறுதல், ஒப்பந்தம் செய்தல் போன்ற சூழ்நிலைகளும் அமையும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். இல்லையெனில், வேலையில் மறைமுகமான தொல்லைகள் இந்த வாரம் உங்களுக்கு இருக்கலாம். அதிக வேலை காரணமாக தெரியாத கவலை, ஒருவித பயம், மனக்குழப்பங்கள் இந்த வாரமும் தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த வாரத்தைப் பொறுத்தவரை உங்கள் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன் கிடைக்கும். பெரிய லாபம் இல்லாவிட்டாலும் பெரிய நஷ்டம் ஏற்படாத சூழ்நிலை இருக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டிருந்தவர்களுக்கு, அது சம்பந்தமான நல்ல செய்திகள் வர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் வழிபாட்டையும், உங்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டையும் தவறாமல் செய்து வாருங்கள்.

Updated On 13 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story