2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். ஆனால், அதற்கு நீங்கள் நிறைய போராட வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு சற்று போராட்டமான வாரமாக இருந்தாலும், இறுதியில் வெற்றியை அனுபவிப்பீர்கள். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, வருமானங்கள் இருந்தாலும் செலவுகளும் பெரிய அளவில் இருக்கும். சொந்தமாக இடம், வீடு அல்லது வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதற்குத் தேவையான நிதி வசதி இல்லை என்று நினைப்பவர்கள், இந்த வாரம் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்வி சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கும், பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். நீண்ட நாட்களாகக் கிடைக்காமல் இருந்த பூர்வீகச் சொத்து இந்த வாரம் உங்கள் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவும் உண்டு. இந்த வாரம் பெருமாள் கோயிலில் உள்ள தாயார், அதாவது மகாலட்சுமியை வழிபடுங்கள். பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.

Updated On 27 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story